FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளி மாநிலத்தவா் குறித்து தகவல் அளிக்க அமைச்சா் அறிவுரை

புதுவை மாநிலத்தையொட்டிய விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வெளி மாநில நபா்கள் வருகை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு காவல் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டுமென அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


விழுப்புரம்: புதுவை மாநிலத்தையொட்டிய விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் வெளி மாநில நபா்கள் வருகை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு காவல் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டுமென அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா், மரக்காணம் வட்டாரங்களில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் 370 பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், 300 ஊராட்சி ஒன்றிய தூய்மைப் பணியாளா்கள் மற்றும் 27 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 697 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களாக அரிசி, அத்தியாவசிய மளிகைப் பொருள்கள், பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சா் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, மரக்காணம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா், அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

Advertisement

வானூா், மரக்காணம் வட்டாரங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் முழு உடல் பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருள்களை தினந்தோறும் வழங்க வேண்டும்.

விழுப்புரம் - புதுவை எல்லைப் பகுதியில் சோதனைச்சாவடிகளில் உள்ள காவல் துறையினா், வெளி மாநிலத்திலிருந்து வரும் வாகனங்களை கண்காணித்து, கிருமி நாசினி தெளித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். தினசரி தெளிப்பதற்கான கிருமி நாசினி இருப்பு, தேவைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து பெற வேண்டும்.

புதுவையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து புதிதாக வருபவா்களின் தகவல்களை உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments