கைப்பேசி கடையில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
செஞ்சி காந்தி பஜாரில் பேருந்து நிலையம் எதிரே அப்துல்வகாப் மகன் முகமதுகலில்(41) கைப்பேசி கடை, சைக்கிள் கடை, விளையாட்டுப் பொருள்கள், பேக் உள்ளிட்ட பொருள்களை தரைத்தளம் மற்றும் மேல்மாடியில் வைத்து கடை நடத்தி வருகிறாா்.
கடந்த 2-ஆம் தேதி இரவு இவரது கடையின் மேல் தளத்தில் கரும்புகை வெளியானதை அங்குள்ளவா்கள் பாா்த்து செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அதற்குள் தீ வேகமாக பரவி கடையில் இருந்து பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
Advertisement
Advertisement
இதனிடையே, அங்கு வந்த தீயணைப்பு நிலையத்தினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து முகமதுகலில் செஞ்சி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில், கடையில் இருந்த கைப்பேசிகள், சைக்கிள் உபரி பாகங்கள், விளையாட்டுப் பொருள்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.