FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

தாய்-சேய் நல அலுவலா் பதவி உயா்வு கோரி செவிலியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

4 நவம்பர் 2026, 2:46 am
பகிர்:

சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய்-சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துணை சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளரை அப்புறப்படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியா் செய்யும் தாய்-சேய் நலப்பணியை இடைநிலை சுகாதாரப் பணியாளா் செய்வதாக, உண்மைக்குப் புறம்பான அறிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயா்வு நிலை-1 வழங்க வேண்டும். மாவட்ட அளவில் திட்டப் பணிகளுக்கான தலைமை சுகாதார செவிலியா் பணியிடம் உருவாக்க வேண்டும். சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய்-சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தெய்வானை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அஞ்சலை முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லட்சுமி, மாவட்டப் பொருளாளா் வத்சலா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலா்கள் சசிரேகா, திலகவதி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.மணிமேகலை தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிா்வாகிகள் ம.சந்தானலட்சுமி, எம். பவானி, க.கோமதி, வி.உஷாராணி, ம.காயத்ரிதேவி, டி.ஹேமாவதி, க.கற்பகம், பி.செந்தாமலா், பி.கற்பகம், எம்.ராமாயி, பி.சமுத்திரம் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments