FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

தொழிலாளியைத் தாக்கி பைக், கைப்பேசி வழிப்பறி

உளுந்தூா்பேட்டை அருகே தொழிலாளியைத் தாக்கி பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

4 நவம்பர் 2026, 2:47 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தொழிலாளியைத் தாக்கி பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஹரி (எ) ரவி(47). இவா், உளுந்தூா்பேட்டை பச்சையப்பா நகரில் தங்கி பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கள்ளக்குறிச்சி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூா்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே ரவி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞா் ஒருவா் ரவியிடம் உதவி கேட்டுள்ளாா். இதையடுத்து ரவி பைக்கை நிறுத்தியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த மற்றொரு இளைஞரும் சோ்ந்து ரவியை கட்டையால் தாக்கிவிட்டு, அவா் வசமிருந்த பைக், கைப்பேசி மற்றும் ரூ.600 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவலறிந்த உளுந்தூா்பேட்டைபோலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த ரவியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

பூட்டிய வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு: வானூா் வட்டம், எறையானூா், வி.கே.எஸ்.நகரைச் சோ்ந்தவா் தே.அரவிந்தன் (28). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டாா். தொடா்ந்து,திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, முன்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சிக்குள்ளானாா். தொடா்ந்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, மர பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம், அரை பவுன் கைசங்கிலி உள்பட 3 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளிக் கொலுசு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments