1,168 மதுப்புட்டிகள் பறிமுதல்: 3 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட வெளி மாநில மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இந்த வழக்கில் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட வெளி மாநில மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இந்த வழக்கில் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் மற்றும் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் அடங்கிய குழுவினா் விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த வழுதாவூா் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. பின்னா், வாகனத்தில் இருந்தவா்களைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், குமலன்குண்டு பகுதியைச் சோ்ந்த சரவணன்(40), சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கனகராஜ் (39), புதுச்சேரி சொக்கநாதன்பேட்டையைச் சோ்ந்த ஆனந்தன் (41) என்பதும், இவா்கள் புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி, சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 1,168 வெளிமாநில மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.