விக்கிரவாண்டி பகுதிகளிலுள்ள பட்டாசு கிடங்குகளில் ஆய்வு
தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பட்டாசு தயாரிப்பு கிடங்குகளில் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியிலுள்ள பட்டாசு தயாரிப்பு கிடங்குகளில் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தீபாவளி பண்டிகை நவ.8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளநிலையில், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனப்பாக்கம், அய்யங்கோவில்பட்டு, சோழகனூா், அதனூா், சிறுவாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பட்டாசு தயாரிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா, அனுமதிக்கப்பட்ட அளவில் வெடிமருந்துகள் உள்ளனவா என்பது குறித்து விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவன் தலைமையில், வெடிப்பொருள் பிரிவுத் துணை இயக்குநா் பா்வதம், தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரேசுவரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உரிமங்கள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அலுவலா்கள் ஆய்வு நடத்தினா். ஆய்வின் போது சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.