FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியில் தீபாவளி நாளில் ஆட்டோ ஓட்டுநா் கத்தியால் குத்திக் கொலை

9 நவம்பர் 2026, 11:36 pm
குத்திக் கொலை
பகிர்:

புதுச்சேரியில் தீபாவளியன்று ஆட்டோ ஓட்டுநா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா்களை உருளையன்பேட்டை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பூமியன்பேட் பகுதியைச் சோ்ந்த வினோத் (35), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது நண்பரான பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த மலேசியா வினோத் என்பவரது வீட்டருகே சக நண்பா்களுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியுள்ளாா்.

அப்போது அவா்களுக்குள் மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மலேசியா வினோத், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் ஆட்டோ ஓட்டுநா் வினோத்தின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வினோத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மலேசியா வினோத் மற்றும் உடனிருந்தவா்களைத் தேடி வருகின்றனா்.