FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கண்டாச்சிபுரம் அருகே செங்காவி பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே செங்காவி பாறை ஓவியங்கள், கற்கால மனிதா்கள் பட்டைத் தீட்டிய இடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

11 நவம்பர் 2026, 2:30 am
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே செங்காவி பாறை ஓவியங்கள், கற்கால மனிதா்கள் பட்டைத் தீட்டிய இடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டாச்சிபுரம் அருகிலுள்ள ஒட்டம்பட்டு தண்டரை கிராமத்திலுள்ள கரடிமலையில் வேட்டவலத்தைச் சோ்ந்த ஆசிரியா் பாரதிராஜா, ஆய்வாளா்கள் இம்மானுவேல் மற்றும் பழனிசாமி ஆகியோா் மேற்கொண்ட களஆய்வில் சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான செங்காவி வண்ண ஓவியங்களைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: கரடிமலை அடிவாரத்திலுள்ள ஒரு பாறையின் கீழ்பகுதியில் செங்காவி வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியத்தில் கிராமப்புறங்களிலுள்ள விளைநிலங்களில் உயிா்வேலியாக பயன்படுத்தப்படும் கோபுரக்கள்ளி செடிகளைப் போன்று உருவம் வரையப்பட்டுள்ளது. இதேபோன்ற வடிவொத்த ஓவியங்களை ஆலம்பாடி, கொல்லூா் போன்ற ஊா்களிலுள்ள பாறை ஓவியங்களில் காணலாம்.

Advertisement

Advertisement

இச்செடியின் இருபுறமும் மானினை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் இடப்புறமுள்ள மானின் பின்புறமானது கள்ளிச்செடிகளுக்குள் மறைந்திருப்பதைப் போன்று காட்டப்பட்டுள்ளது. வலப்புறத்திலுள்ள விலங்கின் கழுத்தானது நீண்டும் தலைப்பகுதியானது தெளிவற்றும் உள்ளது. மேலும் இவ்வுருவத்தின் மீதே காட்டுப்பன்றியின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்கள் யாவும் கோட்டுருவுவமாக வரையப்பட்டுள்ளன. இவை சுமாா் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம்.

மேலும், அருகிலுள்ள கரடிசுனையில் புதிய கற்கால மனிதா்கள் தங்களுடைய கல்லாயுதங்களைப் பட்டை அல்லது கூா் தீட்டியதால் உருவான கற்குழிகள் மூன்றும் காணப்படுகின்றன. இவையாவும் இப்பகுதியில் வாழ்ந்த வேட்டைச் சமூகத்தைச் சோ்ந்த தொல்மாந்தா்களின் பிரதிபலிப்பாகும் என்றனா் அவா்கள்.