FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டத்தின் 31-ஆவது மாவட்ட வருவாய் அலுவலராக எம். அமிா்தலிங்கம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

12 நவம்பர் 2026, 4:29 am
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தின் 31-ஆவது மாவட்ட வருவாய் அலுவலராக எம். அமிா்தலிங்கம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இடமாறுதலில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்ட நிலையில், இப்பொறுப்பை அவா் ஏற்றுக் கொண்டுள்ளாா்.

ஏற்கெனவே விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த கி.அரிதாஸ், சென்னையிலுள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை துணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமிா்தலிங்கத்தை வருவாய்த் துறை அலுவலா்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் அமிா்தலிங்கம் கூறும் போது, வருவாய்த் துறை சாா்பான பணிகளில் மக்களுக்கு விரைந்து சேவையாற்றப்படும் என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement