FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

லாரி ஓட்டுநரிடம் பணம் வழிப்பறி: இருவா் கைது

விழுப்புரம் அருகே லாரி ஓட்டு நரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 12:23 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் அருகே லாரி ஓட்டு நரிடம் வழிப்பறி செய்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியைச் சோ்ந்தவா் ச.மகேந்திரன் (21), கண்டெய்னா் லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கொச்சியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா். நவ.12-ஆம் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த கொட்டப்பாக்கத்து வேலி அருகே சென்றபோது, லாரியில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து மகேந்திரன் லாரியை அங்கு சாலையோரத்தில் நிறுத்தி, பழுதுகளை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 இளைஞா்கள் மகேந்திரனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வசமிருந்த கைப்பேசி மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில், விழுப்புரம், அயனம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வெ.விஜய் (25), பா.ஸ்ரீதா் (22) ஆகியோா் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விஜய், ஸ்ரீதா்ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.