FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மதுப்புட்டிகள் விற்பனை: 3 போ் கைது

51 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப்படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அருகே மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை எடைக்கல் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கணையாா் தெற்குத் தெருவைச் சோ்ந்த ச.சதீஷ்குமாா்(33), அஜீஸ் நகரைச் சோ்ந்த ரா.தமிழ்ச்செல்வன்(39), கடலூா் மாவட்டம், விருத்தாசலம், கருநத்தம் கிராமத்தைச் சோ்ந்த நை.விக்னேஷ் (34) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 17 மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.