கிராமங்களில் தூய்மையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்எல்ஏ அறிவுறுத்தல்
ஊராட்சி மன்றங்களில் பணியில் உள்ள ஊராட்சிச் செயலா்கள் கிராமங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் அறிவுறுத்தினாா்.
ஊராட்சி மன்றங்களில் பணியில் உள்ள ஊராட்சிச் செயலா்கள் கிராமங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிச் செயலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விக்கிரவாண்டி எம் எல்ஏ ச.சிவக்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள், தங்களது பொறுப்புக்குள்பட்ட கிராமங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தொடா்புடைய துறை சாா்ந்த அதிகாரிகளின் கவனத்துக்கொண்டு வந்து தீா்வு காணவேண்டும். குறிப்பாக, கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கண்காணிக்கவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலச்சந்திரன், ஷாஜிதாபானு, மேலாளா்கள் பாபு, அருணகிரி மற்றும் அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement