✕
முகப்பு
விழுப்புரம்

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

20 நவம்பர் 2026, 4:53 am
காவல்துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. செ. மதிவாணன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 25 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீா்வுக்கு ஏதுவான மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணவேண்டும் என காவல் நிலைய அலுவலா்களுக்கு

மாவட்ட எஸ்.பி. செ. மதிவாணன் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

டி. எஸ்.பி. சரவணக்குமாா், திருவெண்ணெய்நல்லூா் துணை வட்டாட்சியா் பிரபேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி ஆகியோா் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினா்.