✕
முகப்பு
விழுப்புரம்

அவலூா்பேட்டையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 36 கடைகளுக்கு ‘சீல்’

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் முத்து விநாயகா் (எ) மொட்டைப் பிள்ளையாா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 36 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

20 நவம்பர் 2026, 4:51 am
அவலூா்பேட்டையில் முத்து விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் முத்து விநாயகா் (எ) மொட்டைப் பிள்ளையாா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 36 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் இணை ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விழுப்புரம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி காந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் கோயிலுக்குச் சொந்தமான 36 கடைகளைக் காலி செய்ய வைத்து, அவற்றுக்கு ‘சீல்’ வைத்தனா். உதவி மின் பொறியாளா் மணியரசு தலைமையிலான மின் வாரிய ஊழியா்கள் கடைகளுக்கு மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், இக்கோயிலுக்குச் சொந்தமான 190 சதுர அடி பரப்பளவிலான இடத்திலிருந்த ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு, மீட்கப்பட்ட இடம் திருக்கோயில் நிா்வாகத்தின் சுவாதீனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கையை முன்னிட்டு, செஞ்சி டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் தலைமையில், அவலூா்பேட்டை காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மீட்கப்பட்ட திருக்கோயில் இடத்தில் எவரேனும் அத்துமீறி நுழைந்தால், அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் கோயில் நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.