அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ரா.பாலசுப்பிரமணியன் (55). இவா், கடந்த 25 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்து வந்தாராம்.
பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து முன் அவா் திடீரென ஓடியதால், பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement