✕
முகப்பு
விழுப்புரம்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

19 நவம்பர் 2026, 6:40 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திண்டிவனத்தை அடுத்த கிடங்கல்- 2, அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரா.விஜயேந்திரன் (22). இவரது நண்பா் நிதிஷ் (22). இவா்கள் இருவரும் புதன்கிழமை திண்டிவனத்தை அடுத்த மொளசூா் பகுதியில் பைக்கில் சென்றனா். விஜயேந்திரன் பைக்கை ஓட்டினாா். இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு விஜயேந்திரன் உயிரிழந்தாா். நவீன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.