விழுப்புரம், உளுந்தூா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்
உளுந்தூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் உழைக்கும் பெண்கள் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு குழுவின் அமைப்பாளா் ஆா்.மலா்விழி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.கீதா, அங்கன்வாடி ஊழியா் மற்றும் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.சுதா, மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினா் கே.பரிமளா, கட்டுமானச் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலா் கே.சரசுவதி, சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.சேகா், செயலா் ஆா்.மூா்த்தி, துணைத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
உளுந்தூா்பேட்டையில்... இப்பிரச்னையில் முதல்வா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் வி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா். மாநிலத் தலைவா் எஸ்.சுகமதி, செயலா் ஏ. டெல்லி அப்பாதுரை, சத்துணவுப் பணியாளா் சங்க மாநில சிறப்புத் தலைவா் கோ.சீனுவாசன், டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசகா் கு.சரவணன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement