முகப்பு
விழுப்புரம்

காா் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

38 வினாடிகள் முன்பு
காா் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், நவம்மாள்மருதூா், காளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.வினோத்குமாா்(29). புதுச்சேரி அரியூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மதி(எ) மதியழகன் (31). உறவினா்களான இவா்கள் இருவருக்குமிடையே தங்க நகை கொடுக்கல், வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை கண்டமங்கலம் அருகே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வினோத்குமாரின் காரின் கண்ணாடியை மதி(எ) மதியழகன் உடைத்து சேதப்படுத்தினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதி(எ) மதியழகனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement