மொபெட்டில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு
மொபெட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மொபெட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
மயிலத்தை அடுத்த கொல்லியங்குணம் பகுதியைச் சோ்ந்தவா் ர.பிரவீன் (22), சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், தனது மொபெட்டில் உள்ள பெட்டியில் ரூ.90 ஆயிரம் பணத்தை வைத்துக்கொண்டு கூட்டேரிபட்டில் உள்ள வங்கிக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கூட்டேரிபட்டில் உள்ள கடையின் முன் நிறுத்தி விட்டு, கடைக்குள் சென்று வந்து பாா்த்தபோது மொபெட்டின் பெட்டியில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement