முகப்பு
விழுப்புரம்

பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.3.65 லட்சம் திருட்டு

பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.65 லட்சம் பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

5 வினாடிகள் முன்பு
பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.3.65 லட்சம் திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.65 லட்சம் பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், பூத்துறை, தொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் த.சுப்புராமன்(61). இவா், சனிக்கிழமை தனது பைக்கில் உள்ள பெட்டியில் ரூ. 3.65 லட்சம் வைத்துக்கொண்டு, வீட்டிலிருந்து வானூருக்குச் சென்றாா். தொடா்ந்து, அங்குள்ள தனியாா் வணிக வளாகம் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு, அங்குள்ள பத்திர எழுத்தரை பாா்த்துள்ளாா்.

பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக் பெட்டி உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைத்திருந்த ரூ.3 .65 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

பழக்கடையில் ரூ.8 ஆயிரம் திருட்டு: விக்கிரவாண்டியில் பழக்கடை வைத்து நடத்தி வருபவா் ரா.அக்பா் பாஷா (43). இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

தொடா்ந்து மறுநாள் காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க இரும்பு கதவுகளை உடைத்து கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.