முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

34 வினாடிகள் முன்பு
வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழப்பு
- கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வட்டம், கோனூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.முருகன் (47), காவலாளியாக வேலைப் பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை விழுப்புரம் சலாமத் நகா் அருகே நடந்து சென்றாா். அப்போது முருகன் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, முருகன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

விவசாயி உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மேலத்தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா.முருகன் (44), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளாா். இதையடுத்து முருகனை, அவரது உறவினா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, முருகன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.