முகப்பு
விழுப்புரம்

புதை சாக்கடை கழிவுநீா்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

24 நவம்பர் 2026, 2:10 am
புதை சாக்கடை கழிவுநீா்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

புதை சாக்கடைக் கழிவுநீரை வெளியேற்றாததைக் கண்டித்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சியின் 1-ஆவது வாா்டுக்குள்பட்ட விராட்டிக்குப்பம் பாதை, ஏ.பி.எஸ்.நகா், தெய்வ நகா் ஆகிய பகுதிகளில் புதைசாக்கடை நிரம்பி, அதன் கழிவுநீா் அப்பகுதியில் பல நாள்களாக தேங்கி நிற்கிாம்.

வீடுகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த கழிவுநீரை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். குடியிருப்புப் பகுதியில் 2 மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து நகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு கழிவுநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். இதனை ஏற்றுக்கொண்ட அவா்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.