முகப்பு
விழுப்புரம்

‘போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை வழங்க நடவடிக்கை தேவை’

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2026, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

27 வினாடிகள் முன்பு
‘போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு
பணப்பலன்களை வழங்க நடவடிக்கை தேவை’
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் 8-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பேசிய பேரவையின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணன்.
பகிர்:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2026, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த அமைப்பின் 8-ஆவது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பேரவையின் விழுப்புரம் மண்டலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா்.வெங்கடேசன், கே.முத்துராமன், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் எஸ்.கண்ணன் வரவேற்று பேசினாா்.

பேரவை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை விழுப்புரம் மண்டலச் செயலா் எஸ். துளசிங்கமும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளா் வி.ராமலிங்கமும் வழங்கினா். முன்னதாக பேரவையின் மாநிலத் தலைவா் எஸ். கிருஷ்ணனும், நிறைவுரையை மாநில பொதுச் செயலா் பி.செல்வராசனும் வழங்கினா்.

Advertisement

Advertisement

தீா்மானங்கள்: அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போன்று போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் அரசே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2026, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டை உடனடியாக வழங்கவேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வாரிசு வேலை வழங்கவேண்டும். போக்குவரத்துக் கழகங்களைத் தனியாா்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில இணை பொதுச் செயலா்கள் எஸ்.ஜேம்ஸ் கஸ்பர்ராஜ், பலராமன், எம்.சண்முகம், வீரராகவன், துணை பொதுச் செயலா்கள் ஆா்.சின்னசாமி, முருகேசன், துணைத் தலைவா் வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.