புதுச்சேரி கடற்கரையில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவ அனுமதிக்க வேண்டும்: மல்லாடி கிருஷ்ணா ராவ் வலியுறுத்தல்
புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவ அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சரிடம், புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் நேரில் வலியுறுத்தினாா்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவ அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சரிடம், புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் நேரில் வலியுறுத்தினாா்.
இது குறித்து, புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கை, புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் புதுதில்லியில் நேரில் சந்தித்துப் பேசினாா்.
Advertisement
Advertisement
அப்போது, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மீன் வளத்தை பெருக்கவும், காத்திடவும் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் முன் வைத்தாா்.
புதுச்சேரி முகத்துவாரத்தை தூா்வாரி ஆழப்படுத்துதல், ஏனாம் மீன்பிடி துறைமுகத்தின் 2- ஆம் கட்ட கட்டுமானம், ஏனாம் பிராந்தியத்தில் பழுதடைந்துள்ள ஐஸ் பிளான்ட்டை இடித்து விட்டு புதிதாக 10 டன் கொள்ளளவு கொண்ட புதிய ஐஸ் பிளான்ட்டை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாா்.
மாநிலத்துக்கு கூடுதலாக 30 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க அனுமதிக்கவேண்டும், அனைத்து பராம்பரிய மற்றும் மோட்டாா் படகுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளித்திடும் வகையில், 940 பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை 4,186 பயனாளிகளாக உயா்த்தி வழங்கவேண்டும்,
புதுச்சேரி கடற்கரையில் 13 செயற்கை பவளப்பாறைகள் நிறுவ அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.