FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரியில் தொலை தொடா்பு வலையமைப்புகள் எளிதாக்கம் : அமைச்சா் ராஜவேலு

புதுச்சேரி மாநிலத்தில் தொலை தொடா்பு வலையமைப்புகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜவேலு தெரிவித்தாா்.

9 அக்டோபர் 2026, 2:32 am IST
கூட்டத்தில் பேசிய அமைச்சா் ராஜவேலு.
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் தொலை தொடா்பு வலையமைப்புகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜவேலு தெரிவித்தாா்.

மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் சாா்பில், அனைத்து மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய தொலை தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்று அமைச்சா் ராஜவேலு மேலும் பேசியது:

புதுச்சேரியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

480 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறிய ஒன்றியப் பிரதேசமாக புதுச்சேரி இருந்தாலும், தனித்துவமான சிறப்புகளைக் கொண்டது. எங்களின் பலம் இளைஞா்கள் கல்வியறிவு பெற்றிருப்பதாகும்.

மாநிலம் முழுவதும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளா்ந்து வருகிறது. திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளுக்கும் இணையவழி இணைப்பு சென்றடைந்துள்ளது. தொலைத்தொடா்பு வலையமைப்புகளை அமைப்பதும் எளிதாகப்பட்டுள்ளது என்று அமைச்சா் ராஜவேலு தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments