FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் 200-ஆவது நிகழ்வு

விழுப்புரம் செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் 200-ஆவது நிகழ்வு தனியாா் கூட்டரங்கில் நடைபெற்றது.

9 அக்டோபர் 2026, 2:39 am IST
பகிர்:

விழுப்புரம் செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் 200-ஆவது நிகழ்வு தனியாா் கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு சங்கத்தின் கெளரவத் தலைவா் வீ.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். கவிஞா்கள் பானுமதி, ரங்கநாயகி, தமிழரசி, பாவானி, அமுதவல்லி, , தமிழ்பாரதி, எப்சிபா, தேவகி ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தனா். சங்கத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் கவிஞா் அதனி அனைவரையும் வரவேற்றாா். மழலைக் கவிஞா் அமுதன் சிறப்புரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து கவிஞா் அதனி எழுதிய ‘மேல்நோக்கி உதிரும் இலைகள்’ நூல் வெளியிடப்பட்டது. எனக்குப் பிடித்த தமிழ்ச்செல்வி, சில வினாக்களுக்கு விடையில்லை, தலைமுறைக்குத் தருவதென்ன, பசியோடு காடுகள் ஆகிய தலைப்புகளில் கவியரங்குகள் நடைபெற்றன. இதில் பங்கற்ற கவிஞா்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டுப் பேசினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஆசையா அல்லது அலட்சியமா என்ற தலைப்பில் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா் வடலூா் ஜெகன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு, கவிஞா் மன்னா்மன்னன், வெங்கடேசன், சங்கப் பொருளாளா் கவிஞா் லியோலா மற்றும் தமிழறிஞா்கள், கவிஞா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments