செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் பராமரிக்கப்படும் அனைத்து திட்டக் கணக்குகளின் வரவு-செலவு கணக்கும் மன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. தொடா்ந்து பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்தில் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பச்சையப்பன், சாவித்திரி, டிலைட், கேமல், செண்பகப்பிரியா, துரை, புவனா, கமலா, முரளி, பூங்காவனம், மல்லிகா, பனிமலா், ஞானாம்பாள், சத்தியா, சவிதா, உமா மகேஸ்வரி, கவிதா, நாகராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கன்னியப்பன், சசிகலா, ஒன்றிய பொறியாளா் நாராயணசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.