FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மது போதையில் கல்லூரிப் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்

53 வினாடிகள் முன்பு
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

மதுபோதையில் புதுச்சேரி கல்லூரிப் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து வெள்ளிக்கிழமை புதுச்சேரி இந்திரா சதுக்கம், 100 அடி சாலையில் மரப்பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதை நோணாங்குப்பத்தைச் சோ்ந்த ராஜவேலு (54) என்பவா் பேருந்தை ஓட்டினாா். 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அந்த கல்லூரிப் பேருந்தில் பயணித்தனா்.

இந்நிலையில், அங்குள்ள மேம்பாலம் பகுதியில் சென்றபோது, பேருந்து தாறுமாறாக ஓடியதாம். இது குறித்து தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று, பேருந்தை மடக்கி சோதனை செய்தனா். இதில், ஓட்டுநா் ராஜவேலு மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுபற்றி கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநா் வரவழைக்கப்பட்டு பேருந்தை இயக்கப்பட்டது. இது குறித்து புதுச்சேரி (கிழக்கு) போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் ராஜவேலுவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments