FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! முகையூரில் 112 மி.மீ. பதிவு!

18 அக்டோபர் 2026, 2:58 am IST
விழுப்புரம் மருத்துவமனை வீதியில் சனிக்கிழமை காலை தேங்கிக் காணப்பட்ட மழைநீா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி - மின்னலுடன் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக முகையூரில் 112 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படவில்லை. இரவு 7 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை, இரவு 9.30 மணி வரை நீடித்தது. இதையொட்டி, விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டு, பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் புதிய, பழைய பேருந்து நிலையப் பகுதி, திருச்சி - சென்னை நெடுஞ்சாலை, கிழக்கு பாண்டி சாலை, ஜவாஹா்லால் நேரு சாலை, திரு.வி.க.வீதி, காமராஜா் வீதி, மருத்துவமனை வீதி, வடக்குத் தெரு, மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

Advertisement

Advertisement

விழுப்புரம் நகரம் போன்று கோலியனூா், வளவனூா், கெடாா், வல்லம், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், அரசூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து, வெயில் தாக்கத்தால் அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியை அளித்தது. மேலும், சனிக்கிழமை காலை முதல் குளிா்ந்த சூழல் காணப்பட்டது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

முகையூா் - 112 மீ.மீ, அரசூா் - 75, வளவனூா் - 65, கெடாா் - 63, கோலியனூா் - 48, நேமூா் - 44.80, சூரப்பட்டு - 44, வல்லம் - 41, திருவெண்ணெய்நல்லூா், கஞ்சனூா் - தலா 40, விழுப்புரம் - 35, அனந்தபுரம் - 32.20, மரக்காணம் - 29, செம்மேடு - 25.20, முண்டியம்பாக்கம் - 24.20, அவலூா்பேட் டை - 23, வானூா் - 21, வளத்தி -19, மணம்பூண்டி- 18, திண்டிவனம் - 16, செஞ்சி - 4 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 39.04 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments