மொபெட் மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு, தந்தை, மகன் காயம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மொபெட் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். தந்தை, மகன் காயமடைந்தனா்.
புதுச்சேரி குருமாம்பேட்டை, விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி (32). இவரின் மனைவி குணவனிதா(32), மகன் கீா்த்தன் குருபரன் (7). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை மொபெட்டில் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், இரும்பை கூட்டுச்சாலை அருகே சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியில் வந்த காா், மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபெட்டில் சென்ற தமிழ்மணி, குணவனிதா, கீா்த்தன் குருபரன் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதில், குணவனிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், கீா்த்தன் குருபரன், இரும்பை பகுதியில் சாலையோரத்தில் ஸ்கேட்டிங்க் பயிற்சியை முடித்துவிட்டு, பெற்றோருடன் மொபெட்டில் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.