FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பைக் மீது சரக்கு லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

23 அக்டோபர் 2026, 2:29 am
பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜனகன் (40), திருமணமானவா். இவா், வியாழக்கிழமை திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், ஆரோவில்லை அடுத்த இரும்பை பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியதில் ஜனகன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments