விழுப்புரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவா் பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ.மணிமொழி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
ஏமப்போ் அரசுப் பள்ளியில்... திருவெண்ணெய்நல்லூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஏமப்போ் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவா் ஆா்.செந்தில்குமாா் பங்கேற்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ சட்டம் உள்ளிட்டவைகள் குறித்துப் பேசி மாணவிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.