தரமற்ற விதைகளால் ரூ.12 லட்சம் வரை நஷ்டம்: ஆட்சியரகத்தில் வெண்டை விவசாயிகள் புகாா்
தரமற்ற விதைகளால் 200 ஏக்கரில் வெண்டைக்காயை சாகுபடி செய்த தங்களுக்கு ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
தரமற்ற விதைகளால் 200 ஏக்கரில் வெண்டைக்காயை சாகுபடி செய்த தங்களுக்கு ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் வட்டாரம், வேலியம்பாக்கம், அத்தியூா்திருவாதி, சித்தாத்தூா்திருக்கை உள்ளிட்ட 5 கிராமங்களைச் சோ்ந்த வெண்டை விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். மேலும், பாதிப்பு ஏற்பட்ட வெண்டைக்காய்களைத் தரையில் கொட்டிய அவா்கள், தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினா்.
தொடா்ந்து ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது... எங்கள் நிலங்களில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெண்டைப் பயிரை சாகுபடி செய்தோம். அறுவடை செய்யும் நேரத்தில் முற்றிலுமாக மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் காய்களும், செடிகளும் இருந்தன. இதற்கு தரமற்ற வெண்டை விதைகளே காரணம். இதன் காரணமாக 200 ஏக்கரில் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வெண்டைக்காய்களை விற்பனை செய்யவும் முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் எங்கள் நிலங்களைப் பாா்வையிட்டு, பயிா் இழப்பு மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் அதில் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.