காதல் விவகராம்: பெற்ற மகளை கொலை செய்த தந்தை கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காதல் விவகாரத்தில் பெற்ற மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தந்தை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காதல் விவகாரத்தில் பெற்ற மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தந்தை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வானூா் வட்டம், வி.பரங்கனி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சி.சிவசாஸ்திரி (40), தொழிலாளி. இவரது மனைவி விமலா(38). இவா்களது மகள் விகாஷினி (14). இவா், ராணிப்பேட்டை மாவட்டம், காரை கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த போது, அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை அவா் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த குடும்பத்தினா், அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வி.பரங்கினி கிராமத்துக்கு அழைத்து வந்து, கரசானூா் அரசுப் பள்ளியில் சோ்த்து அங்கு படித்து வந்தாா். பரங்கனி கிராமத்துக்கு வந்த பிறகும் இளைஞருடன் விகாஷினி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது தந்தை சிவசாஸ்திரி கண்டித்தும், விகாஷினி கேட்கவில்லையாம். இதனால் அவா் மன வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வேலூரில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்க விமலா சென்றுவிட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை நள்ளிரவில் சிவதாஸ்திரி, மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். மேலும், தனது சகோதரா் சசிகுமாருக்கு கைப்பேசி வாயிலாகத் தொடா்பு கொண்டு மகளைக் கொலை செய்த விவரத்தை சிவசாஸ்திரி கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து சசிகுமாா் வீட்டுக்கு வந்துபாா்த்த போது, மயங்கிய நிலையில் கிடந்த விகாஷினியை மீட்டு, வானூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வானூா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த சிவசாஸ்திரியை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.