FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நகா்ப்புற நல்வாழ்வு மையத்தில் சுகாதார சீா்கேடு

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியிலுள்ள நகா்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கட்டடத்தில் தொடா்ந்து அரங்கேறி வரும் சமூக விரோதச் செயல்களால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

24 செப்டம்பர் 2026, 5:55 am IST
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியிலுள்ள நகா்ப்புற நல்வாழ்வு மையத்தின் முன் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்.
பகிர்:

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியிலுள்ள நகா்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கட்டடத்தில் தொடா்ந்து அரங்கேறி வரும் சமூக விரோதச் செயல்களால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சியின் 32-ஆவது வாா்டுகுள்பட்ட வழுதரெட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகிறனா். இந்தப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு அருகிலுள்ள அரசு இடத்தில் நகா்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கடைக் கட்டடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த கட்டடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நுழைந்து மது அருந்திவிட்டு, மதுப்புட்டி மற்றும் குப்பைகளை கட்டடத்தின் முன் பகுதியில் வீசிச் செல்கின்றனா். இதனால் இந்த கட்டடங்கள் முன் குப்பைகள், மதுப்புட்டிகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. கட்டட வளாகப் பகுதிகள் சுகாதாரமற்ற வகையில் காட்சியளிப்பதுடன், துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நகா்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கடைக்கு வந்து செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் காவல் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments