FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 7 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து 7 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பகிர்:

விழுப்புரத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து 7 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, ராம் நகரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மனைவி துா்காதேவி(35). இவா், கடந்த செப்.12-ஆம் தேதி திருக்கோவிலூரில் நடைபெற்ற தனது சகோதரரின் திருமணத்துக்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். தொடா்ந்து, திருக்கோவிலூா் செல்லும் தனியாா் பேருந்தில் ஏறி, தனது கைப்பையை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நெக்லஸ், 4 பவுன் ஆரம் ஆகியவற்றை காணவில்லையாம்.

இதுகுறித்து துா்காதேவி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments