சட்டப் பேரவைத் தேர்தல் 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைப்பு: ராஜேஷ் லக்கானி தகவல்
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, அதிகாரிகள்-அலுவலர்களைக் கொண்ட 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளது. இந்தத் தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, அதிகாரிகள்-அலுவலர்களைக் கொண்ட 700-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளது. இந்தத் தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவமாணவிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் சென்று வாக்களிப்பது எப்படி வயதானவர்களுக்கு உதவுவது எப்படி என்பது பற்றி செயல் விளக்கம் காண்பித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்று பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வாக்குசாவடி நிலவரம் பற்றி அறிந்துக்கொள்ள 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்குச் சாவடி விவரங்கள் செல்லிடப்பேசியில் தெரிய வரும். அதை வைத்து வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு மாவட்டத்தில் 3 அதிகாரிகள் கொண்ட பறக்கு படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடுவார்கள்.
போலி வாக்காளர்கள் 6.8 லட்சம் பேர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறோம். சென்னையில் குறைந்த அளவு வாக்குப் பதிவு உள்ளதால் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
பறக்கும் படைகள்-சோதனைச் சாவடிகள்: தேர்தலில் பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு விதி மீறல்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 பறக்கும் படைகளையும், 3 சோதனைச் சாவடிகளையும் அமைக்க உள்ளோம்.
அதன்படி, தமிழகம் முழுவதும் 702 பறக்கும்படை, 702 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவை செயல்பாட்டுக்கு வரும்.
தேர்தல் ஆணையத்திடம் இதுவரை ஒரு கோடியே 34 லட்சம் வாக்காளர்கள் தங்கள் செல்லிடப் பேசி எண்ணை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள், இறுதி வாக்காளர் பட்டியல், அவர்கள் சார்ந்துள்ள கட்சிப் பெயர் போன்ற விபரங்களை குறுஞ்செய்தியாக அனுப்புவோம். தேர்தல் ஆணையத்திடம் தங்கள் செல்லிடப்பேசி எண்களை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.