FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மேஷம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது..

மேஷ ராசி
பகிர்:

2026 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 26-ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2-ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியம் உள்ளவர்கள். இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தக் காரியத்தையும் பிரதிபலன் கருதி செய்யமாட்டீர்கள்.

கிரகநிலை

26.05.2026 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானம் - தனது ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானம் - தனது ஒன்பதாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

Advertisement

Advertisement

பலன்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்னைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது.

குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம் நஷ்டம் ஆனாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார். வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும்.

வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவற்களை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது.

வியாபாரிகள்

வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

கலைஞர்கள்

திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்

பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும்.

விவசாயிகள்

விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.

அஸ்வினி

உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசியை குரு பார்ப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

பரணி

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.

கார்த்திகை - 1

நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

summary

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 | Mesham Guru Peyarchi 2026 Palangal in Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments