FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
எண் ஜோதிடம்

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 5

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

பகிர்:

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

Advertisement

Advertisement

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு  முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments