FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார ராசி பலன்கள் (ஜூலை 31 - ஆக. 6) 12 ராசிகளுக்கும்! இந்த வாரம் ஜாக்பாட் யாருக்கு?

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 31 ஜூலை 2026, 12:19 pm IST
ஜோதிடம் - file photo
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூலை 31 - ஆகஸ்ட் 6) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எதிர்பாராத பண வரவு உண்டாகும். தொழிலில் மேன்மை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் அனுசரித்து நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி அளிக்கும். விவசாயிகள் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு செயல்பட்டு விளைபொருள்களை விற்பனை செய்வீர்கள்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்ப முன்னேற்றத்துக்கான சம்பவங்கள் நடக்கும். தொழிலில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும். வியாபாரிகள் புதிய சந்தைகளில் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு பண வரவு ஓரளவு நல்லபடியாக இருக்கும். பெண்கள் மற்றவரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உற்றார் உறவினர்களிடத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்கால நிமித்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடக்கும். விவசாயிகள் கூடுதல் மகசூலால் சந்தைகளில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புகழ், பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் குண நலனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளின் கடையை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுப்பார்கள். விவசாயிகள் சக விவசாயிகளிடம் அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் பலனளிக்கும். பெண்கள் சிறிய பயணங்களைச் செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 31, ஆகஸ்ட் 1, 2.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனையில் இருந்த தொய்வு நிலை நீங்கும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருப்பதால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் தங்கள் ஆற்றல் அதிகரிக்கக் காண்பீர்கள். பெண்கள் திடீர் வருமானத்தால் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் முழு அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 3, 4.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து உயரும். மொத்தத்தில் இந்த வாரம் உங்களுக்கு ஜாக்பாட் தான்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம் கண்டுகொள்வீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெண்கள் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 5, 6.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிறையும். உற்றார், உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பீர்கள். பெண்கள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் வருங்காலத்துக்கு செய்யும் பயிற்சிகள் யாவும் வெற்றிகரமாக அமையும்.

சந்திராஷ்டமம் இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

முகத்தில் பொலிவும், தேகத்தில் வசீகரமும் உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் கால நேரங்களை வீணாக்காமல் உழைத்து பெருமையான புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க மாட்டீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளிலும் தேடி வரும். கலைத்துறையினர் பிறரிடம் பேசும்பொழுது கவனமாக இருப்பீர்கள்.

பெண்கள் கணவருடன் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பழைய கடன்கள் வசூலாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளை மேலிடத்தின் கட்டளைப்படியே நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு சில செலவுகளைச் செய்ய நேரிடும்.

பெண்களுக்கு கணவருடன் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல்நலம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் சரியான நேரத்தில் உதவி செய்வார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள், வயல் வரப்பு சண்டை ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பு நிரம்பக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் பெற்றோரின் ஆதரவால் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் திருமணம், மழலைப் பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் நல்லபடியாக முடியும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களின் தன்னம்பிக்கையும் திறமையும் கூடும். வீட்டிலும் வெளியிலும் நல்ல பெயர் வாங்கிவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள் வரவு, செலவுகளில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பும் பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் புகழ் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகப் பலத்தைக் கூட்டிக்கொள்வீர்கள். மாணவர்கள் பலமுறை பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( July 31 - August 6). Read and benefit.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments