வார பலன்கள் (நவ. 13 - 19) - கும்பம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
பண வரவுக்கு குறைவு ஏற்படாது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும்.
உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடமிருந்து விலகி தனித்துச் செயல்படுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
Advertisement
Advertisement
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களால் பெருமைப்படுத்தப்படுவீர்கள். பெண்களுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.