வார பலன்கள் (நவ. 20 - 26) - ரிஷபம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எண்ணிய சில செயல்கள் அலைச்சலுக்குப் பிறகே நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் உறுதியுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு சாதகமான சூழல் நிலவும். பெண்கள் உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வான இடத்தை எட்டுவீர்கள்.
Advertisement
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை