FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவை எடுப்பதல்ல: கௌதம் கம்பீர்

தன்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதல்ல என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
பகிர்:

தன்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதல்ல என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-3 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத வைபவ் சூர்யவன்ஷி, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். கடைசி இரண்டு போட்டிகளுக்கான பிளேயிங் லெவனில் சூர்யவன்ஷி சேர்க்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தன்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதல்ல என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய வேலை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சரியான முடிவுகளை எடுப்பதே என்னுடைய வேலை, அனைவரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதல்ல. சரியான முடிவுகளை எடுப்பதற்காக அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளேன். அனைவருக்கும் பிடிக்கும் ஒரு முடிவினை எடுப்பது மிகவும் எளிது. ஆனால், என்னைப் பொருத்தவரை அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பில்லாமல் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அணியில் நிறைய திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையிலேயே, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்தோம்.

நாட்டுக்காக விளையாடும்போது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு விளையாட வேண்டும். வீரர்கள் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால், வீரர்கள் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

summary

Indian team head coach Gautam Gambhir has stated that his job is to make the right decisions, not to make decisions that everyone likes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments