விழியில் விழுந்தவள்
சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டிருக்கும் "ஜீ ஆண்ட்ஸ்' நிறுவனம், "விழியில் விழுந்தவள்' படத்தின் மூலம் படத் தயாரிப்பில் இறங்குகிறது. லண்டனில் படித்துவிட்டு அங்கு மேடை நாடகங்களை அரங்கேற்றி வரும் அஜாஸ், இந்த
சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டிருக்கும் "ஜீ ஆண்ட்ஸ்' நிறுவனம், "விழியில் விழுந்தவள்' படத்தின் மூலம் படத் தயாரிப்பில் இறங்குகிறது. லண்டனில் படித்துவிட்டு அங்கு மேடை நாடகங்களை அரங்கேற்றி வரும் அஜாஸ், இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கேரளத்தைச் சேர்ந்த ஷில்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேடை நாடக நடிகை அனாகா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தைப் பற்றி கேட்டபோது...
Advertisement
Advertisement
""காதல் வயப்பட்ட ஓர் இளைஞன், அதற்குப் பிறகு தன்னுடைய உருவம், குணங்களை மாற்றிக்கொள்கிறான். அதையடுத்து நிகழும் சம்பவங்களை நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்து சொல்வதுதான் கதை. இதில் நான் 7 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளேன். பாடல்களில் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறோம். "விழியில் விழுந்தவள்' என தொடங்கும் ஒரு பாடலுக்கு மட்டும் நானும் நாயகி ஷில்பாவும் 56 விதமான காஸ்ட்யூம்களில் தோன்றுகிறோம். படம் ரசிகர்களைக் கவரும்'' என்கிறார் இயக்குநரும் நடிகருமான அஜாஸ்.
இசை -பொல்லாக். பாடல்கள் -ரகு. ஒளிப்பதிவு -பிஜூ.