கணவரைப் பிரிந்தார் பிரபல நடிகை கொன்கனா சென்!
ரன்விரும் நானும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்கள் பையனுக்கு...
பிரபல பாலிவுட் நடிகை கொன்கனா சென் தன் கணவரைப் பிரிந்துள்ளார்.
2002ல் வெளியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படம் மூலம் புகழ்பெற்றவர் கொன்கனா சென். 2010 செப்டம்பரில் கொன்கனாவுக்கும் ரன்வீர் ஷோரேவுக்குத் திருமணம் நடந்தது.
கடந்த வருடம் இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இச்செய்திகளை ரன்வீர் மறுத்தார். இப்போது இருவரும் தங்களுடைய திருமண உறவை முறித்துக்கொண்டுள்ளதாக ட்விட்டர் வழியாக அறிவித்துள்ளனர்.
Advertisement
கொன்கனா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: ரன்விரும் நானும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். ஆனால் நட்புடன் இருப்போம். அதேபோல எங்கள் பையனுக்குப் பெற்றோராக இருப்போம். உங்கள் ஆதரவை நாங்கள் வரவேற்போம் என்றார். ரன்விரும் இதேபோல ட்வீட் செய்துள்ளார்.