நடிகர் சங்கத் தேர்தல்: சரத்குமார் அணியில் சிம்பு துணைத் தலைவர் பதவிக்கு போட்டி
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டியிடுகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியின் சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டியிடுகிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-18 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
இரு அணியினரும் நடிகர் சங்க உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில் சரத்குமார் அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டியிடுகிறார்.
சரத்குமார் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் சிம்பு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.