நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து காதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாருக்கு தொழில் அதிபரான நிகோலை சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதனையடுத்து வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. பிரதமர் மோடி, ரஜினிகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இருவரது திருமணமும் நேற்று (ஜூலை 2) தாய்லாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 3) சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில், சரத்குமார் மகள் வரலட்சுமி - நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
முதல்வருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.