FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எனக்கு 75, உனக்கு 72..! ஜென்ஸிகளின் வாயைப் பிளக்க வைக்கும் மம்மூட்டி, சரத்குமார்!

இணையத்தில் வைரலாகும் நடிகர்கள் மம்மூட்டி, சரத்குமார்...

நடிகர்கள் மம்மூட்டி, சரத்குமார்
பகிர்:

நடிகர்கள் மம்மூட்டி, சரத்குமாரின் தோற்றங்கள் இளைஞர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய சினிமாவில் பெரிய புகழுடனும் மிகச்சிறந்த நடிகர் என்கிற அடையாளத்துடனும் இருப்பவர் நடிகர் மம்மூட்டி. திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர், இன்றும் கைவசம் குறைந்தது 4 திரைப்படங்களை வைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகத் தயாரிப்பிலும் சிறந்த திரைப்படங்களைக் கொடுத்துள்ளதால் மம்மூட்டியும் மம்மூட்டி கம்பெனியும் மலையாள சினிமாவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன். இடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மம்மூட்டி இப்போது ஆரோக்கியத்திற்குத் திரும்பி நடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், தமிழ் சினிமாவில் பல ஹிட்ஸ்களை கொடுத்த நடிகர் சரத்குமாரும் வில்லன், முக்கிய கதாபாத்திரங்கள் என சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். உடல் மீது அக்கறை கொண்ட நடிகர் என்பதால் தினமும் உடற்பயிற்சிகளுடன் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிகழ்வில் கலந்துகொண்ட 75 வயதான மம்மூட்டியும் 72 வயதான சரத்குமாரும் தங்கள் இளம் தோற்றத்தால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இருவரும் மேடையில் நிற்கும் விடியோ வைரலாகி வருவதுடன் ஜென்ஸி தலைமுறையினர், ”இருவரும் இந்த வயதிலும் இப்படி அட்டகாசமாக இருக்கிறார்களே!” என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

நடிகர்கள் மம்மூட்டியும் சரத்குமாரும் மௌனம் சம்மதம் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

The appearances of actors Mammootty and Sarathkumar have surprised the youth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments