டாக்ஸி - நடிகர் சரத்குமாரின் 177 ஆவது திரைப்படம்!
சரத்குமாரின் புதிய திரைப்படம் ஆரம்பம்....

நடிகர் சரத்குமார் தன் 177-வது திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்திருப்பதுடன், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நடிகர் சரத்குமாரின் 177 ஆவது திரைப்படமான ‘டாக்ஸி’ அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகிறது.
‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதைக்கான பங்களிப்பைச் செய்ய இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
பெர்ஜெயா குழுமம் - நடிகை ராதிகாவின் ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.