பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா!
தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும்தான் 2017-ம் வருடம் பாலிவுட்டில்
தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும்தான் 2017-ம் ஆண்டு பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்த இரண்டு நடிகைகள் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஒரு படத்தில் நடிக்க தீபிகாவின் 11 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெறுகிறார் என்றும் அவரது காதலர் ரன்வீர் சிங் 10 பில்லியன் டாலர்கள் பெறுகிறார் என்கிறது ஃபோர்ப்ஸ். தீபிகாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர்கள் இருவரும் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
SRK, கிங் கான், பாலிவுட் பாட்ஷா என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக் கானின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 38 பில்லியன் டாலர்கள்! அவர் தான் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட டாப் 10 சம்பள வரிசைப் பட்டியலில் முதலிடம் வகிப்பவர். அவரைத் தொடர்ந்து சல்மான் கான் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருடைய சம்பளமானது 37 பில்லியன் டாலர்களாம்.
Advertisement
Advertisement
கான்களைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இருப்பவர் அக்ஷய். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுப்பதில் இவரும் முக்கியமானவர். சமீபத்தில் அக்ஷய் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘டாய்லெட் - ஏக் ப்ரேம் கதா’ இதற்குச் சான்று.
அமீர் கான் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஹ்ருதிக் ரோஷன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தவர்கள் தான் தீபிகா, பிரியங்கா மற்றும் ரன்வீர் சிங்.
மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் தற்போதைய சம்பளம் 9 மில்லியன் டாலர்கள். இவர் ஒன்பதாம் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பத்தாம் இடத்தைப் பிடித்தவர் ரன்பீர் கபூர்.
மேற்கூறிய பட்டியல் அந்தந்த நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களைப் பொருத்து அமைந்துள்ளது என்றும் இவர்கள் நடித்த படங்கள் சக்கைப் போடு போட்டு ஜூன் 1 2016 லிருந்து ஜுன் 1, 2017 வரை மொத்தமாக 183 மில்லியன்கள் டாலர்களைக் குவித்துள்ளது என்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.